மக்கட்தொகை கணக்கெடுப்பு ;முதற்கட்ட பணிகள் துவக்கம்
மக்கட்தொகை கணக்கெடுப்பு ;முதற்கட்ட பணிகள் துவக்கம்
UPDATED : ஜூன் 02, 2026 04:13 PM
ADDED : ஜூன் 02, 2026 04:10 PM
தேனி;மாவட்டத்தில் மக்கட்தொகை கணக்கெடுப்பிற்கான முதற்கட்ட பணிகள் துவங்கியது. தமிழகத்தில் மக்கட்தொகை கணக்கெடுப்பு பணி 2027 பிப்., முதல் நடக்க உள்ளது. இதற்காக முதற்கட்ட பணிகள் துவங்கி உள்ளன. கணக்கெடுப்பு பணிக்காக கடந்த வாரம் அலுவலர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பயிற்சியில் முதலில் வீடுகள் கணக்கெடுக்க அறிவுறுத்தப்பட்டது.
இதில் 150 முதல் 200 வீடுகளை ஒரு பிளாக் என வரையறுகின்றனர். இந்த வீடுகளில் வசிக்கும் சுமார் 750 முதல் 850 பேரிடம் தகவல் சேகரிக்க ஒரு கணக்கெடுப்பாளர் நியமிக்கப்படுகின்றனர். வீடுகளை பிளாக்குகளாக பிரிக்கும் பணியில் தாலுகா, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இது தவிர மக்கட்தொகை அடர்த்தி அதிகம் உள்ள பகுதிகள் தனியாக வகைப்படுத்தப்பட உள்ளன. ஆறு கண்கெடுப்பாளர்களை ஒருங்கிணைக்க ஒரு மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளன.
அலுவலர்கள் கூறுகையில், 'மக்கட்தொகை கணக்கெடுப்பு பணி முதலில் வீடுகள் வகைப்படுத்துதல், மக்களிடம் கணக்கெடுத்தல் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வீடுகளை வகைப்படுத்தி பிளாக்குகளாக பிரிக்கும் முதற்கட்ட பணிகள் துவங்கி உள்ளது. பிப்., துவங்கும் கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர்கள், அலுவலர்கள் வீடுகளுக்கு சென்று பொதுமக்களிடம் 34 வகையான கேள்விகளை கேட்டு பதிவு செய்ய உள்ளனர்.'
