/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
திராட்சை தோட்டங்களில் குளிர்பதன கிடங்குடன் ஏற்றுமதி திட்டம் தயாரிப்பு
/
திராட்சை தோட்டங்களில் குளிர்பதன கிடங்குடன் ஏற்றுமதி திட்டம் தயாரிப்பு
திராட்சை தோட்டங்களில் குளிர்பதன கிடங்குடன் ஏற்றுமதி திட்டம் தயாரிப்பு
திராட்சை தோட்டங்களில் குளிர்பதன கிடங்குடன் ஏற்றுமதி திட்டம் தயாரிப்பு
ADDED : ஏப் 04, 2025 05:42 AM
கம்பம்: திராட்சை தோட்டங்களில் சிறிய அளவிலான குளிர்பதன கிடங்கு வசதியுடன் ஏற்றுமதி திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய அளவில் திராட்சை சாகுபடியில் மஹாராஷ்டிரா முதலிடம் பெற்று ஏற்றுமதி நடக்கிறது.தமிழகத்திலும் அதிக பரப்பில் திராட்சை சாகுபடியானாலும் ஏற்றுமதி செய்யவில்லை. உள்ளூர் விற்பனையையே நம்பியுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் பன்னீர் திராட்சை ஏற்றுமதி செய்ய பல ஆண்டுகளாக முயற்சி நடந்து வருகிறது.
தோட்டக்கலைத்துறை தற்போது அதற்கான திட்டம் தயாரித்துள்ளது. இதில் திராட்சை தோட்டங்களில் சிறிய அளவிலான குளிர்பதன கிடங்கு அமைக்க ஊக்குவிக்கின்றனர். ஏற்கெனவே சிப்பம் கட்டும் அறை கட்ட ரூ.2 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. அதைப் பயன்படுத்தி ஒன்று முதல் 5 டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிடங்கு அமைக்க கேட்டுக் கொள்ளப்பட உள்ளனர்.
தோட்டக்கலைத்துறையினர் கூறுகையில், ஏற்றுமதி செய்ய விரும்பும் விவசாயிகள் முதலில் குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும். காலை 6:-30 மணியிலிருந்து 11:00 மணிக்குள் திராட்சை அறுவடையை முடிக்க வேண்டும். அறுவடைக்கான பிரத்யேக கத்தரி பயன்படுத்த வேண்டும். அறுவடையில் பழக்கொத்தின் தடிமனான காம்பு பகுதியில் அறுக்க வேண்டும். அப்படி செய்தால் ஈரப்பதம் குறையாது. எடையும் குறையாது. அறுவடை செய்த 2 மணி நேரத்திற்குள் குளிர்பதன கிடங்கிற்கு பழங்களை கொண்டு செல்ல வேண்டும். அறுவடை செய்த கொத்துக்களை ஒன்றன் மேல் ஒன்றாக டிரேயில் அடுக்க கூடாது . தனித் தனியாக அடுக்க வேண்டும். 7 முதல் 10 டிகிரி செல்சியஸ் வெப்பமும், ஈரப்பதம் 80 முதல் 85 சதவீதம் இருக்க வேண்டும். இந்த தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, பன்னீர் திராட்சையை ஏற்றுமதி செய்யலாம் என்று கூறியுள்ளனர். தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுடனான ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.

