/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஜனாதிபதி விருது பெற்ற இன்ஜி., பாராட்டு விழா
/
ஜனாதிபதி விருது பெற்ற இன்ஜி., பாராட்டு விழா
ADDED : ஜன 20, 2024 05:43 AM

தேவதானப்பட்டி: பெரியகுளம், மேல்மங்கலத்தைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி முத்து மணிகண்டன் 27. இவர் உணவுப் பொருள் உலர்த்தும் நவீன இயந்திரங்களை குறைந்த செலவில் விவசாயிகள் அதிக பயன்பெறும் வகையில் தயாரித்துள்ளார்.
இவரது சாதனையை பாராட்டி ஜனாதிபதி திரவுபதி இளம் தொழில் முனைவோர் விருதையும், முதல் பரிசு ரூ. 3 லட்சம் வழங்கினார். தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் அன்பரசு,ராஜா ஆகியோர் கிராமப்புற மேம்பாட்டு தொழில் முனைவோர் விருது, நிதி உதவி வழங்கி ஊக்கப்படுத்தினர்.
மேல்மங்கலத்தில் இவருக்கு மறவர் சமுதாயம் கிராம விவசாயிகள் சங்கம், பொதுமக்கள் இணைந்து பாராட்டு விழா நடத்தினர். கிராம தலைவர் வெங்கடசுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் செல்லமுத்து, ஊராட்சி தலைவர் நாகராஜ், டாக்டர் செல்வராஜ் உள்பட பலர் வாழ்த்தினர்.