/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'அம்ரூத்' திட்டப் பணிகளை விரைந்து முடிக்க பேரூராட்சிகளில் தீவிர ஆய்வு பணிகளை 6 மாதங்களில் முடிக்க அழுத்தம்

ADDED : நவ 23, 2024 06:19 AM
கம்பம்; அம்ரூத் திட்டத்தில் நடைபெறும் குடிநீர் வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தி 6 மாதங்களில் முடிக்க திட்டமிட்டு ஆய்வு நடைபெற்று வருகிறது.
பேரூராட்சிகள், நகராட்சிகளுக்கு அம்ரூத் என்ற பெயரிலும் குடிநீர் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பேரூராட்சி, நகராட்சிகளுக்கு தலா ரூ.20 லட்சம் முதல் 2 கோடி வரை மக்கள் தொகை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பணிகள் துவங்கி இரண்டு ஆண்டுகளை கடந்தும் பல ஊர்களில் இன்னமும் பணிகள் 50 சதவீத அளவே முடிந்துள்ளது. கம்பம், உத்தமபாளையத்தில் 70 சதவீத பணிகள் முடிந்துள்ளது.
புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி , உத்தமபாளையம் , ஒடைப்பட்டி , கோம்பை, பண்ணைப்புரம் , தேவாரம் போன்ற பேரூராட்சிகளில் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. காரணம் ஒப்பந்தகாரர்கள் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை தொடர்பு கொள்வது சிரமமாக உள்ளது .
மேலும் அவர்கள் அமைச்சர்கள் மட்டத்தில் தொடர்பில் இருப்பதால், அவர்களை இங்குள்ள செயல் அலுவலர்கள் கண்டித்து பேசி வேலை வாங்குவ சுலபமானதாக இல்லை. இதை மாவட்ட நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில் 2026 ல் சட்டசபை தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வரும் ஆளும் கட்சி கிடப்பில் போடப்பட்ட வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்கவும், மாவட்ட செயலாளர்களும், எம்.எல்.ஏ.க்களும் ஆய்வு கூட்டங்களை நடத்தி, பணிகளை விரைவுபடுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் பேரில் பேரூராட்சிகளில் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் ஆய்வு கூட்டங்களை நடத்தினார்.
பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கிறிஸ்டோபர்தாஸ், செயல் அலுவலர்கள், தலைவர்கள் , ஒப்பந்ததாரர்கள் லந்து கொண்டனர். அனைத்து கூட்டங்களிலும் பேசிய எம். எல்.ஏ. , உடனடியாக பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் ஒப்பந்தகாரங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.