/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'ஸ்பேஸ் ரேக்ககனைஷன்' செயலி மூலம் குற்றத்தடுப்பு மேற்கொள்ளுங்கள் குற்றத்தடுப்பு கூட்டத்தில் தேனி எஸ்.பி., வலியுறுத்தல்

ADDED : பிப் 14, 2024 04:54 AM

தேனி : 'ஸ்பேஸ் ரேக்ககனைஷன் செயலி' மூலம் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை போலீசார் மேற்கொள்வது அவசியம்.' என, மாதாந்திர குற்றத்தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் எஸ்.பி., பிரசாத் பேசினார்.
தேனி எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு எஸ்.பி., தலைமை வகித்தார். ஏ.டி.எஸ்.பி.,க்கள் விவேகானந்தன், சுகுமார் முன்னிலை வகித்தனர். டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் பங்கேற்றனர்.
மாவட்டத்தில் நடந்த பல்வேறு குற்ற வழக்குகளில் சிறப்பாக பணியாற்றி குற்றவாளிகளுக் தண்டனை பெற்று தந்த இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள், போலீசார் என 17 பேரை பாராட்டி எஸ்.பி., சான்றிதழ்களை வழங்கினார்.
அவர் பேசுகையில், வழக்குகளில் சந்தேகப்படும் நபர்களை அலைபேசியில் போட்டோ எடுத்து 'ஸ்பேஸ் ரேக்கனைஷன் செயலி'யில் பதிவேற்றம் செய்தால் சம்மந்தப்பட்டவரின் குற்ற வழக்கு விபரம் கிடைக்கும்.
எனவே, போலீசார் இச் செயலியை பயன்படுத்தி போலீசார் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். கொலை, திருட்டு, பிற வழக்குகளில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது அவசியம்.' என்றார்.
தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகானந்தம், எஸ்.ஐ.,க்கள் திவான்மைதீன், மணிகண்டன், துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.