/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி ரயில்வே சரக்கு முனையம் நறுமணப் பொருட்கள் கடை துவக்கம் காணொலி மூலம் பிரதமர் மோடி திறந்தார்

ADDED : மார் 12, 2024 11:54 PM

தேனி: மத்திய அரசின் ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு' திட்டத்தின் கீழ், தேனி, போடி ரயில்வே ஸ்டேஷனில் நறுமணப் பொருட்கள் கடைகள், சரக்கு முனைய அலுவலகத்தை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதற்கான விழா தேனி ரயில்வே சரக்கு முனைய வளாகத்தில் நடந்தது. மதுரை ரயில்வே கோட்ட சிக்னல், தகவல் தொடர்பு முதன்மை பொறியாளர் ராம்பிரசாத் தலைமை வகித்தார். முதன்மை வர்த்தகப் பிரிவு ஆய்வாளர் ஜெயச்சந்திரன், மூத்த பொறியாளர்கள் எட்வின், சாஸ்தா, தேனி வர்த்தக சங்க மாவட்டத் தலைவர் கருணாகரன், வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் மாவட்டத் தலைவர் செல்வக்குமார், பா.ஜ., மாவட்டத் தலைவர் பாண்டியன், சென்டெக்ட் இயக்குனர் பச்சைமால் முன்னிலை வகித்தனர்.
பின் ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் கவுண்டர் அருகே அமைக்கப்பட்டு இருந்த நறுமணப் பொருட்கள் விற்பனையகம், ரயில்வே சரக்கு முனைய அலுவலகத்தை குஜராத்தில் இருந்து பிரதமர் மோடி, காணொளி காட்சி மூலம் திறந்து வைத்து, பேசினார். இதனை திரை, எல்.சி.டி., டி.வி.க்கள் மூலம் ஒளிபரப்பப்பட்டது. உதவி கோட்ட பொறியாளர் அசோக் நன்றி தெரிவித்தார். காதி, கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரஹ்மான் சுய உதவி குழ பெண்களின் கண்காட்சி அரங்குகளை அமைக்கும் பணிகளை ஒருங்கிணைத்திருந்தனர். விழாவில் போடி கார்டமன் ரயில்வே பயனாளர்கள் சங்கத்தினர், பா.ஜ.,நிர்வாகிகள், சுய உதவிக்குழு பெண்கள், சரக்கு முனையபணியாளர்கள் பங்கேற்றனர்.