/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
லைப் இன்னோவேஷன் பள்ளியில் பரிசளிப்பு விழா
/
லைப் இன்னோவேஷன் பள்ளியில் பரிசளிப்பு விழா
ADDED : ஆக 31, 2025 04:21 AM

தேனி: தேனி அருகே வடபுதுப்பட்டியில் உள்ள லைப் இன்னோவேஷன் பப்ளிக் பள்ளியில் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கான லைப் இன்னோவிஷ்டா 2025 போட்டிகள் ஆக.,28, 29ல் நடந்தது.
பல்வேறு தலைப்புகளில் பேச்சுப்போட்டி, மாறுவேடப்போட்டி, இசைக்கருவிகள் இசைத்தல், கதை சொல்லுதல், நடனம் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது. இதில் மாவட்டத்தில் உள்ள 13 பள்ளிகளைச் சேர்ந்த 550 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பரிசளிப்பு விழாவிற்கு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமை வகித்து, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பள்ளி தாளாளர் நாரயணபிரபு முன்னிலை வகித்தார். விழா ஏற்பாடுகளை பள்ளி முதல்வர், கல்வி ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

