/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போதைக்கு எதிரான பிரசாரத்தை மாணவர்கள் முன்னெடுக்க வேண்டும் பள்ளி விழாவில் சார்பு நீதிபதி பேச்சு

ADDED : நவ 28, 2024 05:47 AM
உத்தமபாளையம்: போதைப் பொருளுக்கு எதிரான பிரசாரத்தை மாணவர்கள் முன்னெடுக்க வேண்டும் என விழிப்புணர்வு முகாமில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைய குழு செயலரும், சார்பு நீதிபதியுமான பரமேஸ்வரி பேசினார்.
உத்தமபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருள் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இம் முகாமில் பங்கேற்ற மாவட்ட சட்டப் பணிகள் ஆணைய குழு செயலரும், சார்பு நீதிபதியுமான பரமேஸ்வரி பேசியதாவது :
போதையில்லா நாட்டை உருவாக்கும் பணியில் மாணவர்கள் ஈடுபட வேண்டும்.
சமீப காலமாக போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் போதை பொருள் விற்கப்படுவது வேதனையானது. ஒரு வீட்டின் தலைவர் போதைப் பொருள் பயன்படுத்துபவராக இருந்தால் அந்த வீடு நரகமாகும். நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.
நாட்டுக்கும், வீட்டிற்கும் கேடு விளைவிக்க கூடியது போதைப் பொருள். ஆரோக்கியமான உடல் நலம் இருந்தால் தான் கல்வியிலும் சிறந்து விளங்க முடியும். நாட்டின் எதிர்கால வளர்ச்சியில் மாணவர்களின் பங்கு மகத்தானது.
எனவே, மாணவர்கள் போதைப் பொருள் பயன்படுத்த கூடாது. அதை விட போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தை மாணவர்கள் முன்னெடுக்க வேண்டும். போதைப் பொருள் இல்லா நிலையை ஏற்படுத்த ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும், இவ்வாறு பேசினார்.
நிகழ்ச்சியில் மனநல டாக்டர் ஜெகனாதன், இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, வழக்கறிஞர் கருணாகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.