ADDED : ஜன 05, 2024 04:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என தமிழக அரசு கூறி ஓராண்டிற்கும் மேலாகிறது.
இதுவரை பணிநியமனம் செய்யவில்லை. 8 ஆண்டுகளாக பேராசிரியர்கள் நியமிக்கப்படாததால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் நிலை உள்ளது. பேராசிரியர் தகுதி இருந்தும் பலர் நிரந்த பணி வாய்ப்பு கிடைக்காமல் கவுரவ விரிவுரையாளர்களாகவே ஓய்வு பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.கோரிக்கைகளை வலியுறுத்தி வீரபாண்டி கலைக் கல்லுாரியில் அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது. மதுரை மண்டல தலைவர் சுல்தான் இப்ராஹிம் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் அங்கப்ப பிள்ளை, பொருளாளர் உமாதேவி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மாணவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் கையெழுத்திட்டனர்.