/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சின்னமனுாரில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை தாராளம் போலீசார் நடவடிக்கை தேவை
/
சின்னமனுாரில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை தாராளம் போலீசார் நடவடிக்கை தேவை
சின்னமனுாரில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை தாராளம் போலீசார் நடவடிக்கை தேவை
சின்னமனுாரில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை தாராளம் போலீசார் நடவடிக்கை தேவை
ADDED : ஜன 29, 2024 06:29 AM
சின்னமனுார்: சின்னமனுார், அதனை சுற்றியுள்ள பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை தாராளமாக உள்ளது. தடுக்க போலீசார், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தடை செய்யப்பட்ட புகையிலை பெட்டிக் கடைகளில் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. சின்னமனுாரில் சில மொத்த வியாபாரிகள் பெங்களூரு, சென்னை போன்ற பெருநகரங்களில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்கின்றனர். போடியில் கோடவுனை வைத்துக் கொண்டு அன்றாடம் சின்னமனுாருக்கு வினியோகம் செய்யப்படுகிறது. முத்தாலம்மன் கோயில் சமீபம், அரசு மருத்துவமனை, கருங்கட்டான்குளம், காந்திநகர் காலனி, சீப்பாலக்கோட்டை ரோடு, மார்க்கையன்கோட்டை ரோடு, வடக்கு ரதவீதி உள்ளிட்ட நகரில் அனைத்து பகுதிகளிலும் விற்கப்படுகின்றன. சின்னமனுாருக்கு அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த பெட்டிக் கடைக்காரர்களும் சின்னமனுார் வந்து வாங்கி செல்வது தொடர்கிறது.
பள்ளிக் கூடங்களின் அருகில் உள்ள பெட்டிக் கடைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. தடைசெய்யப்பட்ட புகையிலை மட்டும் இன்றி பல்வேறு போதை தரும் வஸ்துக்கள் குறிப்பாக 'கூல் லிப்' எனப்படும் போதைப் பொருள் அதிகமாக விற்பனையாகிறது. மாணவர்கள் போதைக்கு அடிமையாகி வரும் அவலம் எழுந்துள்ளது.
பெயருக்கு நடவடிக்கை எடுக்காமல், ரெகுலராக தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக மொத்த வியாபாரிகள் யார் யார் என்று கணக்கெடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்டி கடைக்காரர்களை அழைத்து கூட்டம் போட்டு, அவர்களிடம் விளக்கி கூற வேண்டும். இளைஞர்கள், மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமால் தடுக்க பள்ளிகளுக்கு சென்று விழிப்புணர்வு பிரசாரங்களையும் போலீசார் முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான் விற்பனையை தடுக்க முடியும்.