/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
செயற்கைக்கால் பொருத்த அளவெடுக்கும் முகாம்
/
செயற்கைக்கால் பொருத்த அளவெடுக்கும் முகாம்
ADDED : மார் 17, 2025 08:03 AM

கூடலுார் : செயற்கை கால், கை பொருத்துவதற்கான அளவெடுக்கும் முகாமில் நுாற்றுக்கணக்கான மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.
கேரளா வண்டிப்பெரியாறில் ஆஷா பவுண்டேஷன் இந்தியா டிரஸ்ட் சார்பில் செயற்கை கை, கால் இலவசமாக வழங்குவதற்காக அளவெடுக்கும் முகாம் டிரஸ்டின் தலைவர் மணிகண்டன் தலைமையில் நடந்தது. பீர்மேடு எம்.எல்.ஏ., வாழூர் சோமன் முன்னிலை வகித்தார்.
தமிழகத்திலில் இருந்து தேனீக்கள் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு உட்பட 185க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இதில் கலந்து கொண்டனர். செயற்கை கை கால் அளவு எடுக்கும் பணிகள் நடந்தன.
மேலும் வீல் சேர், காது கேட்கும் கருவி ஆகியவையும் இலவசமாக வழங்குவதற்கான கணக்கெடுக்கும் பணி நடந்தது.
தமிழகத்தில் இருந்து தேனீக்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் அழகேசன், பாண்டி ஆகியோர் ஏராளமான மாற்றுத் திறனாளிகளை அழைத்துச் சென்று உதவிபுரிந்தனர்.