/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நீதிமன்றத்தை மாற்ற எதிர்ப்பு: மறியல் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் ரோடு மறியல்
/
நீதிமன்றத்தை மாற்ற எதிர்ப்பு: மறியல் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் ரோடு மறியல்
நீதிமன்றத்தை மாற்ற எதிர்ப்பு: மறியல் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் ரோடு மறியல்
நீதிமன்றத்தை மாற்ற எதிர்ப்பு: மறியல் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் ரோடு மறியல்
ADDED : ஜூலை 23, 2025 12:34 AM

பெரியகுளம்; பெரியகுளத்தில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தை மாற்றக்கூடாது என வழக்கறிஞர்கள் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெரியகுளம் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் தலைவர் பாலாஜி தலைமையில் நடந்தது.
செயலாளர் நாராயணசாமி, மூத்த வழக்கறிஞர்கள் கிருஷ்ணமூர்த்தி, சந்திரசேகரன், அம்பாசங்கர், தாமோதரன் முன்னிலை வகித்தனர். பெரியகுளம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படும், கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தை மாற்றக்கூடாது. தேனி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் போதுமான இட வசதி இல்லை. ஆனால் பெரியகுளத்தில் நூறு ஆண்டு பழமையான நீதிமன்றங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இதனை நீதிமன்றங்களுக்கு பயன்படுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதிகளை சந்தித்து வலியுறுத்துவது என இரு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ரோடு மறியல்: அமர்வு நீதிமன்றத்தை மாற்றக்கூடாது என வலியுறுத்தி நேற்று மாலை வழக்கறிஞர் சங்கத்தினர், பல்வேறு சமூக அமைப்புகள், பொதுமக்கள் கூட்டம் நடத்தினர்.
இரவு 8:00 மணிக்கு அரசு போக்குவரத்து கழக டெப்போ அருகே திண்டுக்கல் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., நல்லு பேச்சுவார்த்தை நடத்தினார். இன்று கலெக்டரை சந்திக்க உள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்து கலைந்து சென்றனர்.

