/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சில்லரை மது விற்பனைஎதிர்த்து ஆர்ப்பாட்டம்
/
சில்லரை மது விற்பனைஎதிர்த்து ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 16, 2025 07:12 AM
தேனி : பூதிப்புரம் வாழையாத்துப்பட்டி விலக்கு புதிய கழிப்பறை அருகே நடைபெறும் சில்லரை மது விற்பனை போலீசார் தடுக்க வலியுறுத்தி புரட்சித் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டச் செயலாளர் வீரகுரு தலைமை வகித்தார். தேனி ஒன்றியச் செயலாளர் சுதர்சன், மாவட்ட துணைச் செயலாளர் பாலா,பெண்கள் பங்கேற்றனர். ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்குள்ள சில்லரை விற்பனை நடக்கும் இடத்தில் உள்ள தகர செட் அமைக்கப்பட்டுள்ளஇடத்தை தாக்கி சேதப்படுத்தியும், அப்பகுதி நபர் ஒருவர் வந்த வாகனத்தை மறித்து மறியல் செய்தனர். அப்போது பழனிசெட்டிபட்டி சிறப்பு எஸ்.ஐ., கணேஷ், ஏட்டு பிரபாகரன் வாகனத்தை மறித்த நபரை அகற்றி முறைப்படி புகார் அளிக்க அறிவுறுத்தினர்.