/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விடுதி பெயர் மாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
விடுதி பெயர் மாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 24, 2025 05:39 AM
தேனி: கள்ளர் சீரமைப்பு துறையினர் கீழ் இயங்கும் மாணவர் விடுதிகளை சமூகநீதி விடுதி என பெயர் மாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி கலெக்டர் அலுவலகம் முன் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாநில இளைஞரணி துணைத்தலைவர் காசிராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பெயர் மாற்ற அரசாணை நகலை கிழித்தனர். கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர்.
முன்னதாக இதே கோரிக்கையை வலியுறுத்தி பாரதிய பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட நிர்வாகி முருகன் தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்து, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கூடலுார்: மாநில விவசாய சங்க தலைவர் செங்குட்டுவன் தலைமை வகித்தார். சீர்மரபினர் நல சங்க தலைவர் லதா, பொறுப்பாளர்கள் சிவாஜி, முருகன் முன்னிலை வகித்தனர். பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தினர் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கௌதம், உத்தமபாளையத்தில் கவியரசன் சின்னமனூரில் ஜெயபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளர் சீரமைப்பு துறை விடுதிகளின் பெயர் மாற்றத்தை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்றும், அரசு உத்தரவை திரும்ப பெறும் வரை போராட்டம் நடைபெறும் என அறிவித்தனர்.