/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டி.இ.ஓ.,வை கண்டித்து காத்திருப்பு போராட்டம்
/
டி.இ.ஓ.,வை கண்டித்து காத்திருப்பு போராட்டம்
ADDED : ஆக 19, 2025 12:44 AM

தேனி; போடி ஒன்றியத்தில் உள்ள முதுவாக்குடி, கொட்டக்குடி, அகமலையில் உள்ள மலைப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை விதிகளை பின்பற்றி நிரப்பாத தொடக்க கல்வி டி.இ.ஓ.,வை கண்டித்து ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணியினர் அல்லிநகரத்தில் உள்ள டி.இ.ஓ., அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் செல்லத்துரை தலைமை வகித்தார். மாநில செயலாளர் கிருஷ்ணசாமி, மாவட்ட செயலாளர் ராம்குமார், நிர்வாகிகள் ராமர், சரவணன், சுருளியம்மாள் உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
மாவட்ட செயலாளர் ராம்குமார் கூறுகையில், ' டி.இ.ஓ., ஆசிரியர்களின் போராட்டத்தை கண்டு கொள்ளாமல் சென்றார். கல்வித்துறை அதிகாரிகள் விதிமுறைகளின் படி தலைமைஆசிரியர் நியமிக்கும் வரை போராட்டம் தொடரும்,' என்றார்.

