/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசியல் பிரமுகர்கள் வீடுகள் அருகே கண்காணிப்பு கேமரா வனத்துறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு
/
அரசியல் பிரமுகர்கள் வீடுகள் அருகே கண்காணிப்பு கேமரா வனத்துறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு
அரசியல் பிரமுகர்கள் வீடுகள் அருகே கண்காணிப்பு கேமரா வனத்துறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு
அரசியல் பிரமுகர்கள் வீடுகள் அருகே கண்காணிப்பு கேமரா வனத்துறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு
ADDED : ஜூலை 20, 2025 05:08 AM
மூணாறு: மூணாறில் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க அரசியல் பிரமுகர்கள் வசிக்கும் பகுதியில் வனத்துறையினர் கேமராக்கள் பொருத்திய சம்பவத்தில் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
மூணாறு ஊராட்சியில் 13ம் வார்டான பழைய மூணாறு பகுதியில் சமீபத்தில் புலி நடமாடியது. அப்பகுதியில் காங்கிரஸ் பிரமுகர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் உட்பட சில அரசியல் பிரமுகர்கள் வசிப்பதால் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அல்லாத பட்சத்தில் கடந்த ஜூலை 16ல் வனத்துறை அலுவலகம் முன்பு போராட்டம் உட்பட தீவிர போராட்டங்களை நடத்த போவதாக அறிவித்தனர்.
அதற்கு அஞ்சிய வனத்துறையினர் அரசியல் பிரமுகர்கள் வீடுகளின் அருகில் இரண்டு கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர். இச்சம்பவம் மூணாறைச் சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் தொழிலாளர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. எஸ்டேட் பகுதிகளில் தொழிலாளர்கள் உப வருமானத்திற்காக வளர்க்கும் பசுக்கள் புலி, சிறுத்தை ஆகியவற்றிடம் சிக்கி தினமும் இறந்து வருகின்றன. அது போன்ற பகுதிகளில் தொழிலாளர்களின் நலன் கருதி புலி, சிறுத்தை நடமாடத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்க முன்வராத வனத்துறையினர் அரசியல் பிரமுகர்கள் வீடுகள் அருகே கேமராக்கள் பொருத்தியதால் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து எம்.எல்.ஏ. ராஜா கூறுகையில்., ' புலி, சிறுத்தை நடமாட்டம் உள்ள அனைத்து பகுதிகளிலும் வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றார்.
மூணாறு வனத்துறை அதிகாரி பிஜூ கூறுகையில், 'வனத்துறை வசம் கேமராக்கள் இல்லை. தற்போது வனவிலங்கு பாதுகாப்பு துறையினரிடம் இரண்டு கேமராக்கள் வாங்கி பழைய மூணாறு பகுதியில் பொருத்தப்பட்டது. அதேபோல் வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்கும் வகையில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வனக்காவலர்கள் பணி செய்யும் அவல நிலையில் உள்ளனர்,' என்றார்.