ADDED : டிச 03, 2024 07:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்,முத்துராமலிங்கத்தேவர் ஆகியோரை அவதுாறாக பேசியவர்களை கைது செய்ய வேண்டும்' என கோரி தேனியில் அகிலஇந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாவட்டப் பொதுச் செயலாளர் சக்கரவர்த்தி, மாவட்டத் தலைவர் ராமசாமி, துணைத் தலைவர் நேதாஜிசேகர் ஆகிய நிர்வாகிகள் எஸ்.பி., சிவபிரசாத்திடம் மனு அளிக்க வந்தனர். எஸ்.பி., அறையில் வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்தில் இருந்தார்.
உதவியாளர் இத் தகவலை எஸ்.பி.,யிடம் கூறிவிட்டு வருவதற்குள் கட்சி நிர்வாகிகள் சிலர் எஸ்.பி., அறைக்குள் நுழைந்தனர்.
அவர்களை எஸ்.பி., வெளியே இருக்குமாறு அறிவுறுத்தினார். இதில் அதிருப்தி அடைந்த நிர்வாகிகள் எஸ்.பி., அலுவலக வாசலில்அமர்ந்து, தர்ணாவில் ஈடுபட்டனர்.
பின் நடவடிக்கை எடுப்பதாக எஸ்.பி., உறுதி அளித்தபின் கலைந்து சென்றனர்.