/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம்
/
வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம்
ADDED : ஆக 12, 2025 06:49 AM

கூடலுார் : -கள்ளர் விடுதி பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருநாக்கமுத்தன்பட்டியில் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு கள்ளர் பள்ளிகளில் உள்ள கள்ளர் விடுதியின் பெயரை சமூக நீதி விடுதி என அரசு பெயர் மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று கருநாக்கமுத்தம்பட்டியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சிலம்பரசன் தலைமையில் பொது மக்கள் அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு கள்ளர் துவக்கப் பள்ளிக்கு முன்பு கோஷம் எழுப்பினர்.
கள்ளர் விடுதியின் பெயர் மாற்றத்திற்கான அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும், கள்ளர் துவக்கப் பள்ளியில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு டி.இ.டி. தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி னர்.
ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.