/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரோட்டில் தேங்கிய நீரில் வாழை நட்டு எதிர்ப்பு
/
ரோட்டில் தேங்கிய நீரில் வாழை நட்டு எதிர்ப்பு
ADDED : ஜூன் 28, 2025 11:55 PM

மூணாறு: மூணாறு அருகே வட்டவடை கோவிலூரில் ரோட்டில் தேங்கிய மழைநீரில் பொதுமக்கள் வாழைகளை நட்டு வைத்து எதிர்ப்பு தெரித்தனர்.
மூணாறு அருகில் உள்ள வட்டவடை ஊராட்சி மிகவும் பின் தங்கிய பகுதியாகும். அங்கு மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமங்கள் உட்பட பல பகுதிகளுக்கு ரோடுகள் சரிவர இல்லை. ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரோடுகள் குண்டும், குழியுமாக உள்ளன. மழைக்கு முன்பாக ரோடுகள் சீரமைக்கப்படாததால், தற்போது குண்டும், குழியுமான ரோடுகளில் மழைநீர் தேங்கி வாகனங்கள் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஊராட்சி அலுவலகம் அமைந்துள்ள கோவிலூர் நகரில் ரோட்டில் மழை நீர் குளம் போல் தேங்கி உள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் தேங்கிய மழை நீரில் வாழைகளை நட்டு வைத்தனர்.