/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
எஸ்.ஐ.ஆர்., பணிக்கு கூடுதல் அவகாசம் கோரி ஆர்ப்பாட்டம்
/
எஸ்.ஐ.ஆர்., பணிக்கு கூடுதல் அவகாசம் கோரி ஆர்ப்பாட்டம்
எஸ்.ஐ.ஆர்., பணிக்கு கூடுதல் அவகாசம் கோரி ஆர்ப்பாட்டம்
எஸ்.ஐ.ஆர்., பணிக்கு கூடுதல் அவகாசம் கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 20, 2025 04:22 AM

தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை விரைந்து முடிக்க ஊழியர்களை இடையூறு செய்யக்கூடாது.
திருத்தப்பணிகளை முடிக்க கூடுதல் அவகாசம் வழங்கிட தேர்தல் ஆணையம் உத்தரவிட வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் முகமது ஆசிக் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் தங்கமீனாள், அங்கன்வாடி சங்க மாவட்டத் தலைவர் சுமதி,ஓய்வு அரசு ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் சின்னச்சாமி, அம்பேத்கர் முன்னேற்ற ஆசிரியர்கள் சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் நாகராஜ் ஆகியோர் பேசினர். வட்டக்கிளை பொறுப்பாளர் நிரஞ்சனாதேவி நன்றி கூறினார்.