/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சர்வேயர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
/
சர்வேயர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
ADDED : நவ 20, 2025 04:21 AM

தேனி: தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கம் சார்பில், தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பணிச் சுமைகளை குறைக்கவும், மாநிலம் முழுவதும் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். களப்பணியாளர்கள் பதவியிடங்களை தனியார்மயமாக்குதலை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சேதுபதிராஜா முன்னிலை வகித்தார். மாவட்டப் பொருளாளர் வைரமுத்து, மாவட்ட இணைச் செயலாளர் ஜெகநாதன், முன்னாள் மாவட்டச் செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாவட்டத்தில் தலைமை நிலஅளவையர், நில அளவை சார்பு ஆய்வாளர்கள்,குறுவட்ட நில அளவையர்கள், நில அளவையர் என 66 அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், சர்வே பணிகள் பாதிக்கப்பட்டது.

