/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் - உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்தல்
/
பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் - உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்தல்
பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் - உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்தல்
பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் - உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்தல்
ADDED : பிப் 05, 2025 02:48 AM

கூடலுார்:முல்லைப் பெரியாறு அணைப்பிரச்னை தொடர்பாக 2014ல் உச்சநீதிமன்ற தீர்ப்பில் அறிவுறுத்தியதன்படி மேலும் ஒரு சுரங்கப்பாதை அமைத்து தமிழகப் பகுதிக்கு கூடுதல் தண்ணீர் எடுக்கவும், அணையின் நீர்மட்டத்தை குறைக்கவும் வலியுறுத்தி கேரளா குமுளியில் ஜனநாயக உரிமை பாதுகாப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அனுமதியின்றி நடந்ததால் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
முல்லைப் பெரியாறு அணை உடையும் அபாயம் இருப்பதாகவும், அதனால் அணை அருகே புதிய அணை கட்ட வலியுறுத்தியும் கேரளாவில் தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகப் பகுதியில் விவசாய சங்கங்கள் சார்பில் அணையை ஒட்டியுள்ள பேபி அணையை பலப்படுத்தி நீர்மட்டத்தை உச்சநீதிமன்ற உத்தரவின்படி 152 அடியாக உயர்த்த வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில் கேரளாவில் ஜனநாயக உரிமை பாதுகாப்புக் குழு சார்பில் பிப்.2ல் குமுளியில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இரு மாநில எல்லையான குமுளியில் கேரள தரப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினால் தமிழக விவசாய சங்கங்களும் லோயர்கேம்பில் நடத்தி வந்த ஆர்ப்பாட்டத்தை தவிர்த்து எல்லைப் பகுதியான குமுளி நடத்துவோம் என எச்சரித்தனர்.
போலீஸ் அனுமதி இல்லை
சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் குமுளியில் ஆர்ப்பாட்டம் நடத்த கேரள போலீசார் அனுமதி தரவில்லை. இருந்தபோதிலும் நேற்று ஜனநாயக உரிமை பாதுகாப்பு குழு தலைவர் சுபையர் தலைமையில், கேரள காங்.,முன்னாள் எம்.எல்.ஏ., மாத்யூ ஸ்டீபன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குமுளி கேரள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இருந்து பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடந்து வந்த ஆர்ப்பாட்டக்காரர்களை குமுளி போலீசார் தடுத்து நிறுத்தினர்.
சிறிது நேரம் ரோட்டில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
2014ல் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறியபடி மேலும் ஒரு சுரங்கப்பாதை அமைத்து தமிழக பகுதிக்கு கூடுதலாக தண்ணீர் எடுக்க வேண்டும்.
அதன்பின் அணையின் நீர்மட்டத்தை குறைக்க வேண்டும், கேரள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்ததால் குழுவின் தலைவர் சுபையரை மட்டும் கைது செய்தனர்.