/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சேதம் அடைந்த ரோடு சீரமைக்க கோரி மறியல்
/
சேதம் அடைந்த ரோடு சீரமைக்க கோரி மறியல்
ADDED : ஜூன் 18, 2025 04:39 AM

போடி: போடி அருகே பத்திரகாளிபுரம் மெயின் ரோடு சேதம் அடைந்துள்ளதை சீரமைக்க கோரி பொதுமக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
போடியில் இருந்து டொம்புச்சேரி, உப்புக்கோட்டை வழியாக தேனி செல்லும் மெயின் ரோட்டில் பத்திரகாளிபுரம் மெயின் ரோடு உள்ளது. கூழையனுார், பாலார்பட்டி, காமராஜபுரம் கிராம மக்களும் இந்த ரோட்டை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த ரோடு சேதம் அடைந்து குண்டும், குழியுமாகவும், மழைக் காலங்களில் பள்ளம் தெரியாத அளவிற்கு சிறுகுளம் போல தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் வாகனங்கள் வேகமாக செல்லும் போது நடந்து செல்லும் நபர்கள் மீது கழிவுநீர் அபிஷேகம் நடக்கிறது. இரவில் ரோட்டில் உள்ள பள்ளம் தெரியாமல் டூவீலரில் செல்வோர் விழுந்து அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. சேதம் அடைந்த ரோட்டை சீரமைக்க கோரி பொதுமக்கள் நேற்று ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் தங்கராஜ், போடி ஒன்றிய பி.டி.ஓ., திருப்பதி வாசன், பழனிசெட்டிபட்டி போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ரோடு சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். ரோடு மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.