/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம்
/
கலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம்
ADDED : பிப் 14, 2024 04:40 AM

தேனி, : உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., பரிந்துரை அடிப்படையில் சின்னமனுாரில் ஆதிதிராவிட மக்களுக்கு ஒதுக்கீடு செய்த வீட்டு மனையிடத்தில் வீடு இல்லாத பட்டியலின மக்களுக்கு பட்டா வழங்க கோரி தேனி கலெக்டர் அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
கட்சியின் மாநில குழு உறுப்பினர் லாசர், மாவட்ட செயலாளர் அண்ணாமலை, செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன், சின்னமனுார் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். காத்திருப்பு போராட்டம் மாலை வரை தொடர்ந்தது. டி.ஆர்.ஓ., ஜெயபாரதி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தீர்வு எட்டப்படாததால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலெக்டரிடம் கோரிக்கைகள் தொடர்பாக பேச வேண்டும் என கூறி போராட்டத்தை தொடர்ந்தனர். இரவு 8:00 மணிக்கு கலெக்டர் பேச்சுவார்த்தை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.

