/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சிறார் திருமணம் பற்றி தகவல் தெரிவியுங்கள்
/
சிறார் திருமணம் பற்றி தகவல் தெரிவியுங்கள்
ADDED : ஏப் 27, 2025 07:03 AM
தேனி: கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளதாவது: சிறார் திருமணத்தால் கருச்சிதைவு, தாய் சேய் மரணம், உடல் மன குறைபாட்டுடன் குழந்தைகள் பிறக்கும் அபாயம் உள்ளது. இதனால் பெண் குழந்தைகள் கல்வி , எதிர்கால லட்சியம் தடைபடுகிறது. சிறார் திருமணம் நடத்தி வைக்கும் பெற்றோர், உடந்தையாக இருந்தவர்களுக்கு சட்டப்படி கடுங்காவல் தண்டனை அல்லது ஒரு லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். மாவட்டத்தில் சிறார் திருமணம் இல்லாத மாவட்டமாக மாற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் சிறார் திருமணங்கள் நடந்தால் இலவச தொலைபேசி எண் 1098, மாவட்ட சமூக நல அலுவலக எண் 04546 -254 368 என்ற எண்களில் தெரிவிக்கலாம். அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு 89031 84098 என்ற அலைபேசி எண்ணில் தெரிவிக்க கேட்டுக்கொண்டுள்ளார்.

