/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
40 இடங்களில் வானிலை கருவி அமைக்க ஏற்பாடு: திராட்சை சாகுபடியை மேம்படுத்த உதவும்
/
40 இடங்களில் வானிலை கருவி அமைக்க ஏற்பாடு: திராட்சை சாகுபடியை மேம்படுத்த உதவும்
40 இடங்களில் வானிலை கருவி அமைக்க ஏற்பாடு: திராட்சை சாகுபடியை மேம்படுத்த உதவும்
40 இடங்களில் வானிலை கருவி அமைக்க ஏற்பாடு: திராட்சை சாகுபடியை மேம்படுத்த உதவும்
ADDED : ஜன 03, 2024 06:57 AM

மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்குகில் 1721 எக்டேரில் திராட்சை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு பன்னீர் திராட்சை, விதையில்லாத திராட்சை சாகுபடி செய்யப்படுகிறது. பன்னீர் திராட்சை மார்ச் - மே, அக்டோபர், நவம்பரில் அறுவடை செய்யப்படுகிறது. விதையில்லா திராட்சை மார்ச் - மே யில் மட்டும் அறுவடையாகிறது. இவை பிற மாவட்டங்கள், மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. இச் சாகுபடியில் செவட்டை நோய், பழவெடிப்பு போன்றவற்றால் விவசாயிகள் பாதிப்பிற்குள்ளாகின்றனர்.
இச் சாகுபடியில் ஏற்படும் நோய், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் மாற்றங்களை கண்காணிக்கும் பணியில் தோட்டக்கலைத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக ஓடைப்பட்டி திராட்சை விவசாயி கலாநிதி தோட்டத்தில் சோதனை முறையில் தானியங்கி வானிலைக் கருவி ஒன்றறை ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டது. அந்த கருவி இணையம் மூலம் மஹாராஷ்டிரா, புனேவில் செயல்படும் தேசிய திராட்சை ஆராய்ச்சி நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் கூறுகையில், 'வானிலை கருவி மூலம் திராட்சை, வாழை உள்ளிட்ட அனைத்து பயிர்களுக்கும் முன்னறிவிப்பு தகவல்கள் கூறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இக்கருவி பொருத்தப்பட்டுள்ள 3 ஏக்கர் பரப்பில் என்ன பயிரிட்டாலும் துல்லியமாக முன்னறிவிப்பு தகவல்களை வெளியிடும். மாவட்டத்தில் அடுத்த நிதி ஆண்டில் 20 முதல் 40 இடங்களில் இக்கருவி பொருத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது என்றனர்.
பயனுள்ள ஆலோசனை அறிவிப்பு
தானியங்கி வானிலை கருவி தோட்டத்தில் பொருத்தியுள்ள விவசாயி கலாநிதி கூறுகையில், 'இந்த கருவியில் காற்றின் வேகம், மண்ணின் ஈரப்பதம், இலையின் ஈரப்பதம், மண்ணின் தன்மை, இலை நீராவிப்போக்கு, இலையின் நிலை, மழையளவு, காலநிலை, வானிலை அறிக்கை உள்ளிட்ட தகவல்கள் சேகரித்து அவை தேசிய திராட்சை ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது.
இத் தகவல் மூலம் பயிர்களுக்கு தெளிக்க வேண்டிய மருந்துகள், தெளிக்க வேண்டிய நேரம், தேவையான சத்துக்கள் பற்றிய தகவல்கள் அலைபேசிக்கு வருகிறது. இதனால் பயிர் பாதுகாப்பிற்கு தேவையான ஆலோசனை வழங்கி வேர் அழுகல் உள்ளிட்ட நோய் தவிர்க்கப்படுவதால் பயனுள்ளதாக உள்ளது' என்றார்.