நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : மாவட்டத்தில் ஆயுதப்படை வாகன பிரிவில் பணிபுரிந்த போலீஸ்காரர் முருகன் சில நாட்களுக்கு முன் உயிரிழந்தார்.
இவரது குடும்பத்தினருக்கு 2011 பேட்ச் நண்பர்களின் சார்பாக நிதி உதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அவரது தாயார் சீலக்காரி மாத ஓய்வூதியம் பெறும் வகையில், ரூ.22.39 லட்சம் காப்பீடாகவும், மருத்துவ செலவிற்காக வங்கி கணக்கில் ரூ.3.28 லட்சம் என மொத்தம் ரூ.25.68 லட்சம் நிதி உதவியை 2011 பேட்ச் காக்கி உதவும் கரங்கள் சார்பில் எஸ்.பி., சினேஹா பிரியா இறந்த போலீஸ்காரர் குடும்பத்தினரிடம் வழங்கினார். 2011 பேட்ச் போலீசார் ராஜேஸ்கண்ணன், வாஞ்சிநாதன், கதிரவன், ஆனந்த் பிரேமா, உமாதேவி நிதி வழங்கள் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.