/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு பள்ளிக்கு ரூ.2.50 லட்சம் பொருள்கள் வழங்கல்
/
அரசு பள்ளிக்கு ரூ.2.50 லட்சம் பொருள்கள் வழங்கல்
ADDED : ஜன 28, 2025 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தமபாளையம்: உத்தமபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி துவங்கி 100 ஆண்டுகளை கடந்ததால், சமீபத்தில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
இவ் விழாவை முன்னாள் மாணவர்கள் நடத்தினர். விழாவிற்கான செலவுகள் முடிந்த பின் இருந்த பணத்தை, பள்ளிக்கு தேவைப்படும் சேர்கள், மின்விசிறிகள், டேபிள்கள் என பொருள்களை ரூ.2.50 லட்சத்திற்கு வாங்கி பள்ளி தலைமையாசிரியரிடம் வழங்கினார்கள். ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் சண்முகம், கல்லூரி பேராசிரியர் சீனிவாசன் , அட்வகேட் சத்யமூர்த்தி உள்ளிட்ட முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.

