/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
327 உர கடைகளுக்கு புதிதாக விற்பனை கருவிகள் வழங்கல்
/
327 உர கடைகளுக்கு புதிதாக விற்பனை கருவிகள் வழங்கல்
327 உர கடைகளுக்கு புதிதாக விற்பனை கருவிகள் வழங்கல்
327 உர கடைகளுக்கு புதிதாக விற்பனை கருவிகள் வழங்கல்
ADDED : ஜூலை 08, 2025 01:59 AM

தேனி: வேளாண் துறை சார்பில் உர விற்பனை நிலையங்களுக்கு புதிதாக 327 விற்பனை முனைய கருவிகள் வழங்கும் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் 74 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், 253 தனியார் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
உர விற்பனைக்காக மத்திய உர அமைச்சகம் சார்பில் விற்பனை முனைய கருவிகள் (பி.ஓ.எஸ்., மிஷன்கள்) வழங்கப்பட்டன. உரம் விற்பனையின் போது ஆதார் உள்ளிட்ட விவரங்கள் பி.ஓ.எஸ்., மிஷினில் கட்டாயம் பதிவேற்ற வேண்டும். இதன் மூலம் விவசாயம் தவிர மற்ற பயன்பாட்டிற்கு உரம் தடுக்கவும், கூடுதலாக உரங்கள் வாங்குவோர் கண்காணிக்கவும் இந்த தகவல்கள் பயன்படுத்தப்பட்டது.
தற்போது மேம்படுத்தப்பட்ட புதிய 327 பி.ஓ.,எஸ்., மிஷன்கள் மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பணபரிவர்த்தனை
இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், 'புதிதாக வழங்கப்பட உள்ள கருவிகளில் செயலிகள், கார்டுகள் பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தலாம்.
ஏற்கனவே பி.ஓ.எஸ்., கருவி வைத்துள்ளவர்களிடம் அதனை வாங்கிய பின் புதிய கருவி வழங்கப்படும்.
இந்த மேம்படுத்தப்பட கருவியை எவ்வாறு பயன்படுத்துவது என உர விற்பனையாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது,' என்றார்.