ADDED : டிச 07, 2024 08:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனியில் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவை சேர்ந்த 300 பயனாளிகளுக்கு ரூ.3.91 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியசாமி வழங்கி, சமபந்தி விருந்தில் பங்கேற்றார்.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார். எம்.பி., தங்கதமிழ்செல்வன், எம்.எல்.ஏ., மகாராஜன் ஆகியார் முன்னிலை வகித்தனர். டி.ஆர்.ஓ., ஜெயபாரதி வரவேற்றார்.
திட்ட இயக்குனர் அபிதாஹனீப்,பெரியகுளம் சப் கலெக்டர் ரஜத்பீடன், ஆதிதிராவிடர் நல அலுவலர் சசிகலா, தேனி நகராட்சித் தலைவர்கள் ரேணுப்பிரியா உள்பட பலர் பங்கேற்றனர்.