sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை பொதுமக்கள் புகார் தெரிவிக்க அறிவுறுத்தல்

/

இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை பொதுமக்கள் புகார் தெரிவிக்க அறிவுறுத்தல்

இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை பொதுமக்கள் புகார் தெரிவிக்க அறிவுறுத்தல்

இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை பொதுமக்கள் புகார் தெரிவிக்க அறிவுறுத்தல்


ADDED : டிச 20, 2024 03:33 AM

Google News

ADDED : டிச 20, 2024 03:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: அரசு, தனியார் இ-சேவை மையங்களில் வருவாய்த்துறை தொடர்பான சான்றிதழ்கள் பெற கூடுதல் கட்டம் வசூலித்தால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

தமிழகத்தில் வருவாய்த்துறை தொடர்பான பல்வேறு வகையான சான்றிதழ்கள் பெறுவதற்கு பொதுமக்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்க வேண்டும். அவற்றிற்கு அரசு குறைந்தபட்சம் ரூ.10 முதல் அதிகபட்சம் ரூ.120 வரை கட்டணம் நிர்ணயித்துள்ளது. விண்ணப்பித்து சில நாட்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து சான்றிதழ்கள் வழங்குகின்றன. பொதுமக்கள் விண்ணப்பிக்க ஏதுவாக அனைத்து தாலுகா அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகத்தில் அரசு சார்பிலும், மற்ற இடங்களில் தனியார் சார்பிலும் இ-சேவை மையங்கள் இயங்குகின்றன. இதில் சில இ-சேவை மையங்களில் நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் கட்டணங்கள் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளன.

அதிகாரிகள் கூறுகையில், அரசு சார்பில் சான்றிதழ்கள் பெற குறிப்பிட்ட தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக ஆதரவற்ற விதவை நிதியுதவி திட்டம், முதல்வர் உழவர் பாதுகாப்பு திட்டம், மாற்றத்திறனாளி உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க கட்டணம் ரூ.10. இது தவிர இருப்பிட, ஜாதி, வாரிசு, ஆதரவற்ற விததை, கலப்பு திருமணம், ஆண்வாரிசு இல்லை, வேலையில்லை, கல்வி ஆவணங்கள் பேரிடரால் தொலைந்தது உள்ளிட்டவற்றிற்கான சான்றிதழ்கள் பெற ரூ.60 மட்டும் கட்டணமாக வசூலிக்க வேண்டும். திருமண நிதி உதவி திட்டங்களில் பயன்பெற விண்ணப்ப கட்டணம் ரூ.120, ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றத்திற்கு ரூ.30, புதிய ரேஷன் கார்டிற்கு விண்ணப்பிக்க ரூ. 60 மட்டும் கட்டணம் வசூலிக்க வேண்டும். கூடுதலாக யாரேனும் வாங்கினால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். புகார்களை இலவச தொலைபேசி எண்கள் 1800 425 6000 அல்லது 1800 425 2911 ல் தெரிவிக்கலாம் என்றனர்.






      Dinamalar
      Follow us