/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குப்பை கிடங்கில் மீண்டும் புகை கூடலுாரில் பொதுமக்கள் பாதிப்பு
/
குப்பை கிடங்கில் மீண்டும் புகை கூடலுாரில் பொதுமக்கள் பாதிப்பு
குப்பை கிடங்கில் மீண்டும் புகை கூடலுாரில் பொதுமக்கள் பாதிப்பு
குப்பை கிடங்கில் மீண்டும் புகை கூடலுாரில் பொதுமக்கள் பாதிப்பு
ADDED : ஆக 29, 2025 03:38 AM

கூடலுார்: கூடலுார் குப்பைக் கிடங்கில் பற்றிய தீயில் இருந்து வெளியேறும் புகை பொதுமக்களை மீண்டும் பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது.
கூடலுார் நகராட்சி 21 வார்டுகளிலும் சேகரமாகும் குப்பை குடியிருப்பு பகுதிகளை ஒட்டியுள்ள பெத்துக்குளத்தில் கொட்டப்படுகிறது.
குப்பையில் அடிக்கடி தீ வைத்து விடுவதால் அதிலிருந்து வெளியேறும் புகை சுவாசப் பிரச்னை உள்ள பொதுமக்கள் பலருக்கு பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
குப்பை கிடங்கை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டி கண்காணிப்பு கேமரா பொருத்தி தீ வைத்து விடாமல் கண்காணிக்கப்படும் எனவும், இனிமேல் புகை வெளியேறாமல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நகராட்சி நிர்வாகம் தெரிவித்தது. பல மாதங்களாகியும் இதுவரை இதற்கான நடவடிக்கை இல்லை. மீண்டும் குப்பையில் தீ வைத்துள்ளதால் புகை வெளியேறி குடியிருப்புப் பகுதிகளை சூழ்ந்து வருகிறது. இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு நிரந்தர தீர்வை உடனடியாக நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

