/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வீடுகளுக்கு முறையாக குடிநீர் வழங்க வேண்டும்; கிராம சபையில் பொதுமக்கள் முறையீடு
/
வீடுகளுக்கு முறையாக குடிநீர் வழங்க வேண்டும்; கிராம சபையில் பொதுமக்கள் முறையீடு
வீடுகளுக்கு முறையாக குடிநீர் வழங்க வேண்டும்; கிராம சபையில் பொதுமக்கள் முறையீடு
வீடுகளுக்கு முறையாக குடிநீர் வழங்க வேண்டும்; கிராம சபையில் பொதுமக்கள் முறையீடு
ADDED : நவ 24, 2024 07:52 AM

தேனி : மாவட்டத்தில் நடந்த ஊராட்சி கிராமசபை கூட்டங்களில் அடிப்படை வசதிகளை சரி செய்து தரக்கோரி பொதுமக்கள் முறையிட்டனர்.
தேனி ஒன்றியம் ஊஞ்சாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் பாண்டியம்மாள் தலைமை வகித்தார். மண்டல துணை பி.டி.ஓ., பேபி முன்னிலை வகித்தார். வீடுகளுக்கு முறையாக குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். வேளாண் அலுவலர் கண்ணன், ஊராட்சி செயலாளர் பாலசந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரண்மனைப்புதுார் ஊராட்சி அலுவலகத்தில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் பிச்சை தலைமை வகித்தார். துணைத்தலைவர் காசிராஜன் முன்னிலை வகித்தார். வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். கூட்ட ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் பாண்டி செய்திருந்தார். கொடுவிலார்பட்டியில் ஊராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் ஈஸ்வரி தலைமை வகித்தார். வார்டு உறுப்பினர்கள், பி.டி.ஓ., மைதிலி, ஒன்றிய அலுவலக பற்றாளர் இன்பரவி, ஊராட்சி செயலாளர் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சுருளிப்பட்டியில் நடந்த கிராமசபை கூட்டத்திற்கு தலைவர் ஞானமணி தலைமை வகித்தார். மண்டல பி.டி.ஓ., பானுமதி, வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் சுருளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பெரியகுளம்: ஒன்றியம் எண்டப்புளி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் தலைவர் சின்னப்பாண்டியன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் கோகிலா முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ராஜபாண்டியன், ஒன்றிய அலுவலர் ஜெயசீலன், ஊராட்சி செயலர் பிச்சைமணி, வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். தூய்மை காவலர்கள் கவுரவிக்கப்பட்டனர். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கீழ வடகரை: ஊராட்சி தலைவர் செல்வராணி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ராஜசேகரன் முன்னிலை வகித்தார்.மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம், ஊராட்சி செயலர் லெனின், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். லட்சுமிபுரம் ஊராட்சியில் தலைவர் ஜெயமணி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ராமலட்சுமி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் நந்தினி, வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
வடபுதுப்பட்டி: ஊராட்சிதலைவர் அன்னபிரகாஷ் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் பிரியா, மகளிர் திட்ட இயக்குனர் ஜெய்சங்கர், ஊராட்சி செயலர் மணிகண்டன், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.மேல்மங்கலம் ஊராட்சியில் தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பாண்டியன் முன்னிலை வகித்தார்.ஊராட்சி செயலர் முருகன், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
ஜெயமங்கலம்: ஊராட்சி தலைவர் அங்கம்மா தலைமை வகித்தார். ஊராட்சி செயலர் கோபால், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.-