/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் கலங்கலான குடிநீர் வினியோகம் வார்டு சபை கூட்டத்தில் பொதுமக்கள் புகார்
/
தேனியில் கலங்கலான குடிநீர் வினியோகம் வார்டு சபை கூட்டத்தில் பொதுமக்கள் புகார்
தேனியில் கலங்கலான குடிநீர் வினியோகம் வார்டு சபை கூட்டத்தில் பொதுமக்கள் புகார்
தேனியில் கலங்கலான குடிநீர் வினியோகம் வார்டு சபை கூட்டத்தில் பொதுமக்கள் புகார்
ADDED : அக் 28, 2025 04:17 AM
தேனி: தேனி நகராட்சி பகுதியில் வினியோகிக்கப்படும் கலங்கலான குடிநீரை சுத்திகரித்து வினியோகிக்க வேண்டும் என வார்டு சபை கூட்டத்தில் பொதுமக்கள் புகார் அளித்தனர்.
தேனி நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளில் சில வார்டுகளில் சிறப்பு வார்டு சபை கூட்டம் நடந்தது. அல்லிநகரம் பெருமாள் கோவில் தெருவில் 10வது வார்டிற்கான கூட்டம் நடந்தது. கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமை வகித்தார்.
நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா, எம்.பி., தங்கதமிழ்செல்வன், எம்.எல்.ஏ., சரவணக்குமார் முன்னிலை வகித்தனர். நகராட்சி கமிஷனர் பார்கவி, தேனி தாசில்தார் சதீஸ்குமார் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதில் பொதுமக்கள் பங்கேற்று சாக்கடை துார்வார வேண்டும், குப்பைகளை தினமும் அகற்ற வேண்டும் என கோரினர்.
கலங்கலான குடிநீர் வினியோகம் மச்சால்தெரு பகவதியம்மன் கோவில் சாவடியில் 5வது வார்டிற்கான கூட்டம் நடந்தது. கவுன்சிலர் கிருஷ்ணபிரபா தலைமை வகித்தார். நகராட்சி ஆர்.ஐ., ராமசாமி, உதவியாளர் சுகன்யா பங்கேற்றனர்.
கூட்டத்தில் வார்டிற்குட்பட்ட பல பகுதிகளில் சாக்கடை துார்வாராமல் சுகாதாரகேடாக உள்ளது. பேவர் பிளாக் ரோடுகள் சேதமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக குடிநீர் கலங்கலாக வினியோகிக்கப்படுகிறது.
சுத்திகரித்து வினியோகிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பொது மக்கள் முன்வைத்தனர்.
பூங்கா அமைக்க வேண்டும் 31வது வார்டில் கவுன்சிலர் லதா தலைமையில் சோலைமலை அய்யனார் கோவில் தெருவில் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் டி.எஸ்.பி., அலுவலகம் அருகே பூங்கா அமைக்க வேண்டும். குடியிருப்பு பகுதியில் பாதாள சாக்கடை நிரம்பி செல்வதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகராட்சி ஆரம்பப்பள்ளியை சீரமைக்க வேண்டும். இடையூறாக உள்ள தனியார் மதுபானக்கடையை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

