/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்: கருத்தடை மையம் செயல்பாட்டிற்கு வருமா

ADDED : ஆக 24, 2025 03:48 AM

கூடலுார்: கூடலுாரில் கூட்டமாக உலா வரும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மூடு விழா கண்டுள்ள கருத்தடை மையம் செயல்பாட்டிற்கு வருமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
கூடலுாரில் கடந்த சில நாட்களாக தெரு நாய்கள் கூட்டமாக தெருக்களில் உலா வருவது அதிகரித்துள்ளது. எல்.எப்., ரோடு, பெட்ரோல் பங்க் ரோடு, காமாட்சியம்மன் கோயில் தெரு, மெயின் பஜார், நகராட்சி தெரு, எல்லைத்தெரு உள்ளிட்ட முக்கிய தெருக்களில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் கூட்டமாக செல்லும் நாய்கள் அச்சுறுத்தி வருகின்றன.
காலையில் பள்ளி செல்லும் குழந்தைகள் அச்சமடைந்துள்ளனர். எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் மற்றும் பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் தெரு நாய்களை கட்டுப்படுத்த புகார் செய்துள்ளனர்.
பழைய சந்தை வளாகத்தில் நாய்கள் கருத்தடை மையம் இருந்தது.
பயன்பாடின்றி இதன் கட்டடங்கள் சேதம் அடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தெரு நாய்கள் அதிகரித்து வரும் நிலையில் இதனைக் கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்ட வேண்டும். நாய்களுக்கு கருத்தடை செய்து மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.