/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு 4 இடங்களில் உடைமாற்றும் அறை வசதிசெய்திட கோரி மனு தினமலர் நாளிதழுடன் பொதுமக்கள் மனு
/
சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு 4 இடங்களில் உடைமாற்றும் அறை வசதிசெய்திட கோரி மனு தினமலர் நாளிதழுடன் பொதுமக்கள் மனு
சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு 4 இடங்களில் உடைமாற்றும் அறை வசதிசெய்திட கோரி மனு தினமலர் நாளிதழுடன் பொதுமக்கள் மனு
சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு 4 இடங்களில் உடைமாற்றும் அறை வசதிசெய்திட கோரி மனு தினமலர் நாளிதழுடன் பொதுமக்கள் மனு
ADDED : நவ 05, 2024 06:06 AM

தேனி: சபரி மலை ஐயப்ப பக்தர்களுக்கு 4 இடங்களில், கழிப்பிடம், உடைமாற்றும் அறை வசதி செய்திட கோரி பா.ஜ.,கவினர் மனு அளித்தனர்.
கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.
டி.ஆர்.ஓ., ஜெயபாரதி முன்னிலை வகித்தார். கலெக்டர் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் வெங்கடாசலம், மாவட்ட வழங்கல் அலுவலர் மாரிசெல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 172 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.
பெரியகுளம் தாலுகா தேவதானப்பட்டி குமரேசன் மனுவில், தேவதானப்பட்டி அரசு மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள தெருவில் அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரவில்லை.
குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வினியோகிக்கப்படுகிறது. குப்பை அகற்றுவதில்லை. அடிப்படை வசதிகள் செய்து தர கோரியுள்ளார்.
மேல்மங்கலம் அம்மாபட்டி தெரு ராஜகுல அகமுடையார் உறவின்முறை தலைவர் வெள்ளைசாமி தலைமையில் நிர்வாகிகள் வழங்கிய மனுவில், மேல்மங்கலம் கிராம பொதுகோயிலான பட்டாளம்மன், முத்தையாசாமி கோயிலில், திருப்பணி சட்ட ஒழுங்கு பிரச்னை இன்றி நடத்த வேண்டும். விழாவில் எங்கள் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். என குறிப்பிடப்பட்டிருந்தது.
'தினமலர் நாளிதழ்' செய்தியுடன் மனு:அம்மச்சியாபுரம் ஜீவா உள்ளிடோர் தினமலர் நாளிதழில் வெளிவந்த செய்தியுடன் மனு அளித்தனர்.
மனுவில், 'குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்குவதால் விஷ பூச்சிகள் வருகின்றன. வீடுகளும் சேதமடைகிறது.
ஊராட்சி நிர்வாகத்தில் முறையிட்டால், நிதி வந்ததும் கழிவு நீர் வாய்க்கால் அமைத்து தருவதாக கூறுகின்றனர்.
மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரினர்.
உத்தமபாளையம் பா.ஜ., நிர்வாகி கார்த்திக் வழங்கிய மனுவில், சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை நவ.,16ல் துவங்குகிறது.
ஐயப்பனை தரிசிக்க தேனி மாவட்டம் வழியாக அதிக அளவில் பக்தர்கள் செல்வார்கள். பக்தர்கள் வசதிக்காக வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், லோயர் கேம்ப், குமுளி பஸ் ஸ்டாண்ட், கம்பம்மெட்டு பகுதியில் தற்காலிக கழிப்பறை, உடைமாற்றும் அறைகள் அமைத்து தர வேண்டும்.
மேலும் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் 3 வேளை உணவு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
போலீஸ் பாதுகாப்பு: டூவீலர்களக்கு அபராதம்கலெக்டர் அலுவலகத்தில் கடந்த வாரம் 4 பெண்கள் தீக்குளிக்க முயன்றனர். இதனால், நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, பொதுமக்கள் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன.
தேவையின்றி கலெக்டர் அலுவலகம் வழியாக பயணித்த டூவீலர்களுக்கு அபராதம் விதித்தனர்.