ADDED : மார் 14, 2024 04:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடமலைக்குண்டு: வருஷநாடு அருகே காமராஜபுரத்தில் மாவட்ட அளவிலான மக்கள் தொடர்பு திட்ட முகாம் ஒன்றியக்குழு தலைவர் சித்ரா தலைமையில் நடந்தது.
ஊராட்சி தலைவர் பொன்னழகு வரவேற்றார். கலெக்டர் ஷஜீவனா முன்னிலை வகித்தார். பொதுமக்களிடம் இருந்து ஏற்கனவே மனுக்கள் பெறப்பட்டன இந்த மனுக்கள் மீது பரிசீலனை செய்யப்பட்டு அதற்கான தீர்வு காணப்பட்டது. 100க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பல லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகள், புதிய பயனாளிகளுக்கு நலத்திட்டங்களுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன. பெரியகுளம் ஆர்.டி.ஓ., முத்துமாதவன், டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, ஆண்டிபட்டி தாசில்தார் காதர்ஷெரீப், பி.டி.ஓ.,க்கள் நாகராஜ் பாலகிருஷ்ணன் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

