/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பேவர் பிளாக் சீரமைக்காததால் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை தேனி நகராட்சி 3வது வார்டில் பொதுமக்கள் அவதி
/
பேவர் பிளாக் சீரமைக்காததால் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை தேனி நகராட்சி 3வது வார்டில் பொதுமக்கள் அவதி
பேவர் பிளாக் சீரமைக்காததால் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை தேனி நகராட்சி 3வது வார்டில் பொதுமக்கள் அவதி
பேவர் பிளாக் சீரமைக்காததால் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை தேனி நகராட்சி 3வது வார்டில் பொதுமக்கள் அவதி
ADDED : டிச 18, 2024 06:52 AM

தேனி : தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட 3வது வார்டு மட்டன் ஸ்டால் வடக்கு புதுத்தெருவில் அவசர காலங்களில் ஆட்டோ, ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட வந்து செல்ல முடியாத நிலை நிலவுகிறது. ரோட்டினை சீரமைத்து தர அப்பகுதி குடியிருப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் ஒரு சில வார்டுகளைத் தவிர மற்ற வார்டுகளில் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த பாதாள சாக்கடை அமைப்பதற்காக பல இடங்களில் ரோடு தோண்டபட்டது. ஆனால் அங்கு மீண்டும் முறையாக சீரமைக்கவில்லை. இதனால் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்ட ரோடுகளை சீரமைக்க ஆண்டு தோறும் நகராட்சியில் நிதி ஒதுக்கினாலும், களத்தில் நடக்கும் பணி கானல் நீராகவே உள்ளது.
நகராட்சி 3வது வார்டில் ஆறுமுகம் தெரு, கட்டளைகிரிதெரு, தெற்கு புதுத்தெரு, மட்டன்ஸ்டால் வடக்கு புதுத்தெரு, நேருஜிரோடு, கக்கன்ஜிதெரு, பாலன் நகர் உள்ளிட்ட 25 தெருக்கள் இடம் பெற்றுள்ளன.
வடக்கு புதுத்தெரு தேனி-பெரியகுளம் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது.
இந்த தெருவில் 20க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசிக்கின்றனர். ஆனால் மாநில நெடுஞ்சாலை உயரம் அதிகரித்துக்கொண்டே செல்வதால் இந்த தெரு தற்போது தாழ்வாக உள்ளது.
இத் தெருவில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட ரோடும் உயரம் அதிகரிப்பதால் வீடுகள் பள்ளத்திற்குள் செல்கின்றன. மழைகாலங்களில் சில வீடுகளில் மழைநீர் உட்புகுவதும் தொடர்கிறது. இதனால் தெருவில் அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் வாய்க்கால் பயன்பாடின்றி மண் மேவி உள்ளது. தெருவின் நுழைவுப்பகுதி மண் மேவி உள்ளதால் மழை காலங்களில் பலர் வழுக்கி விழுகின்றனர்.
மேடுபள்ளமான ரோட்டால் சிரமம்
கனகராஜ், மட்டன்ஸ்டால் வடக்கு புதுத்தெரு அல்லிநகரம் : தெருவில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்ட பிறகு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டது. இதனால் பல இடங்களில் கற்களை எடுத்து பின்னர் பதித்தனர். இந்த பணியை சரியாக மேற்கொள்ளவில்லை. இதனால் பல இடங்களில் கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இரவில் தெருவில் நடந்து வருபவர்கள், வயதானவர்கள் சிரமத்திற்கு ஆளாகும் நிலை உள்ளது. நுழைவு பகுதியில் பாதாள சாக்கடை மூடி சேதமடைந்துள்ளது. இதனால் டூவீலர்களில் வருபவர்கள் தடுமாறி கீழே விழுகின்றனர். ரோட்டினை சீரமைக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆட்டோ கூட வர முடிவதில்லை
சதீஷ்கண்ணன், வடக்கு புதுத்தெரு, அல்லிநகரம் :பாதாள சாக்கடை இணைப்பிற்காக வீடுகளுக்கு முன் தொட்டி போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவை வீடுகளுக்கு முன் ரோட்டில் வாகனங்கள் செல்ல முடியாதவாறு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அவசர காலங்களில் ஆட்டோ, சிறிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் தெருவிற்குள் வருவதில்லலை. மழைகாலத்தில் மேடான பகுதிகளில் இருந்து தெருவிற்குள் மழைநீர் உட்புகுகிறது. இதனை தடுக்க வேறு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். என்றார்