/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குச்சனுார் கோயிலில் புதுச்சேரி முதல்வர் தரிசனம்
/
குச்சனுார் கோயிலில் புதுச்சேரி முதல்வர் தரிசனம்
ADDED : ஏப் 13, 2025 03:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னமனுார்: தேனி மாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயிலில் நேற்று இரவு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தரிசனம் செய்தார்.
இங்கு தனி சன்னதியில் சனீஸ்வரர் சுயம்புவாக எழுந்தருளிய கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு நேற்று இரவு 8:30 மணியளவில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வந்தார். சுரபி நதிக்கரையில் இருந்த விநாயகரை வணங்கினார். தொடர்ந்து கருவறைக்கு முன் நின்று சுவாமியை வழிபட்டார். அவரது பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டது. பின்னர் போடி புதுக்காலனி சாய்பாபா கோயிலில் தரிசித்தார்.