
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: கூடலுார் ஒழுகுபுளி பகுதியில் வாழை, நெல் விவசாயம் அதிகம் நடைபெறுகிறது.
அப்பகுதியில் ராமர், மனோகரன், பிரபு ஆகியோர்களது தோட்டத்தில் வாழைக்கு, நெல்லுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக பயன்படுத்தப்படும்
மோட்டார், பம்ப்செட், தண்ணீர் கொண்டு செல்லப்படும் பிளாஸ்டிக் பைப்புகள் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டிருந்தது.
மேலும் சொட்டுநீர் பாசனத்திற்கு பயன்படும் பிளாஸ்டிக் பைப்புகள் தீவைக்கப்பட்டு எரிக்கப்பட்டிருந்தது. கூடலுார் தெற்கு போலீசில் விவசாயிகள் புகார் செய்ததைத் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

