/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்டத்தில் ரூ.5 கோடிக்கு ஏலம் போன கல்குவாரிகள்
/
மாவட்டத்தில் ரூ.5 கோடிக்கு ஏலம் போன கல்குவாரிகள்
ADDED : மார் 07, 2024 06:13 AM
தேனி: மாவட்டத்தில் கனிம வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 7 கல்குவாரிகளுக்கான ஏலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
டி.ஆர்.ஓ., ஜெயபாரதி தலைமை வகித்தார். கனிம வளத்துறை உதவி இயக்குனர் கிருஷ்ணமோகன் முன்னிலை வகித்தார். இதில் ஆண்டிப்பட்டி திம்மரசநாயக்கனுார், சண்முகசுந்தரபுரத்தில் 2 குவாரிகள், போடி தாலுகாவில் கோடாங்கிபட்டியில் 3, போடியில் ஒன்று என மொத்தம் 7 கல்குவாரிகள் ஏலம் நடந்தது.
இதில் கோடங்கிபட்டியில் புதிதாக 2.50 எக்டேர் பரப்பில் உருவாக்கப்பட்டுள்ள குவாரிக்கு ரூ.4 கோடி ஏலத்தொகை நிர்ணயம் செய்யப்பட்டது.
அந்த குவாரி ரூ. 5 கோடிக்கு ஏலம் போனது. மற்ற 6 குவாரிகள் ஏலம் போகவில்லை. அதிகாரிகள் கூறுகையில், 'அரசு நிர்ணயித்த தொகைக்கு யாரும் ஏலம் கேட்காததால் 6 குவாரிகள் ஏலம் போகவில்லை. என்றனர்.

