/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
திருட்டு வழக்கில் கைதியிடம் விசாரணை
/
திருட்டு வழக்கில் கைதியிடம் விசாரணை
ADDED : ஜூலை 12, 2025 04:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : போடி அணைக்கரைப்பட்டி சூர்யா 35. இவர் திருட்டு, வழிப்பறி, டூவீலர்களை திருடுவது உட்பட பல்வேறு வழக்குகளில் கைதுசெய்யப்பட்டு, திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
வீரபாண்டி அருகே கடந்த 2025 ஏப்.9, மே மாதங்களில் 2 டூவீலர்கள் திருடு போனது. டூவீலர்களை திருடியது திண்டுக்கல் சிறையில் இருந்த சூர்யா என விசாரணையில் தெரியவந்தது. தேனி எஸ்.ஐ., முருகேசன் தலைமையிலான போலீசார், சூர்யாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு அளித்து, நேற்று முன்தினம் விசாரித்து தேனி மாவட்ட தேக்கம்பட்டி சிறையில் அடைத்தனர்.

