/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியகுளத்தில் ‛'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' முகாம்
/
பெரியகுளத்தில் ‛'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' முகாம்
பெரியகுளத்தில் ‛'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' முகாம்
பெரியகுளத்தில் ‛'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' முகாம்
ADDED : ஏப் 13, 2025 07:14 AM
தேனி : பெரியகுளம் வட்டாரத்தில், உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம் ஏப் 16, 17 ஆகிய 2 நாட்கள் நடக்க உள்ளது. இம் முகாமில் பெரியகுளம் வட்டார பொது மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கி நிவாரணம் பெறலாம். முதியோர் உதவித் தொகை கோருதல், புதிய ரேஷன்கார்டு கோருதல், விபத்து நிவாரணம் உள்ளிட்டவை குறித்து வழங்கலாம். ஏப்.16ல் மாலை 4:30 முதல் 6:00 மணி வரை பெரியகுளம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங்கிடம் மனு வழங்கி பயன் பெறலாம்.
பட்டா மாறுதல் மனுக்கள் தொடர்பாக பெரியகுளம் ஆர்.டி.ஓ., அலுவலக இ.சேவை மையத்தின் மூலம் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.