/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வெறிநோய் தடுப்பூசிசெலுத்தும் முகாம் துவக்கம்
/
வெறிநோய் தடுப்பூசிசெலுத்தும் முகாம் துவக்கம்
ADDED : ஜூன் 04, 2025 01:22 AM
தேனி: முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு உள்ளாட்சி பகுதிகளில் வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடக்க உள்ளது. தேனி நகராட்சி முதல் வார்டில் முகாமை டி.ஆர்.ஓ., மகாலட்சுமி   துவக்கி வைத்தார். நகராட்சித் தலைவர் ரேணுப்பிரியா, கால்நடைகள் பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் கோயில்ராஜா, உதவி இயக்குனர் அப்துல்ரகுமான், டாக்டர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். முதற்கட்டமாக 5 நகராட்சிகள், 1 பேரூராட்சியில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவக்கப்பட்டு உள்ளன.
ரேபிஸ் நோய் ஒரு வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது. இந்நோய் நரம்பு மண்டலம் மூலம் உடலில் சென்று மூளையை தாக்கி வெறிநோய் ஏற்படுகிறது. இப்பாதிப்பிற்கு எவ்வித வைத்தியமும் இல்லை. தடுப்பூசி ஒன்றே சிறந்த தீர்வு. இங்கு மொத்தம் 19,684 நாய்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்புத்துறையுடன், உள்ளாட்சியும்    இணைந்து தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடக்க உள்ளன.
பொது மக்கள், விலங்கின ஆர்வலர்கள் உதவிட வேண்டும்,'என, டி.ஆர்.ஓ., தெரிவித்தார். இந்நகராட்சியில் 3 வார்டுகளில் 67 நாய்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. 2 வாரங்களில் பணிகள் நிறைவுபெற திட்டமிடப்பட்டுள்ளது என இணை இயக்குனர் தெரிவித்தார்.

