/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நாய்களுக்கு 'ரேபீஸ்' தடுப்பூசி செலுத்துவது கட்டாயம்; மருந்தகங்களில் இலவசமாக செலுத்த ஏற்பாடு
/
நாய்களுக்கு 'ரேபீஸ்' தடுப்பூசி செலுத்துவது கட்டாயம்; மருந்தகங்களில் இலவசமாக செலுத்த ஏற்பாடு
நாய்களுக்கு 'ரேபீஸ்' தடுப்பூசி செலுத்துவது கட்டாயம்; மருந்தகங்களில் இலவசமாக செலுத்த ஏற்பாடு
நாய்களுக்கு 'ரேபீஸ்' தடுப்பூசி செலுத்துவது கட்டாயம்; மருந்தகங்களில் இலவசமாக செலுத்த ஏற்பாடு
ADDED : ஆக 27, 2024 05:38 AM
தேனி, : மாவட்டத்தில் வெறிநாய்கடி 'ரேபீஸ்' நோய் ஏற்படாத வண்ணம் தடுக்க கால்நடை மருந்தகங்களில் வெறிநாய்கடிக்கான தடுப்பூசியை தங்களது நாய்களுக்கு இலவசமாக செலுத்தி 'ரேபீஸ்' நோய் இல்லாத மாவட்டம் உருவாக்க உதவ வேண்டும்.' என, தேனி கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை அறிவுறுத்தி உள்ளது.
உலக சுகாதார நிறுவனம், 'ரேபீஸ்' இல்லா உலகத்தை உருவாக்க கிராமம், நகர் பகுதியிலும் வெறிநாய்க கடிக்கான தடுப்பூசிகளை அட்டவணைப்படி நாய்களுக்கு செலுத்திக் கொள்வது அவசியம் என அறிவுறுத்தியுள்ளது. தேனி தப்புக்குண்டுவில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை,ஆராய்ச்சி மையம், கால்நடை பராமரிப்புத்துறையுடன் இணைந்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
கால்நடை பராமரிப்புத்துறை மூலம் செயல்படும் 53 கால்நடை மருந்தகங்களில் இலவச வெறிநாய்க்கடி தடுப்பூசி (ரேபீஸ் தடுப்பூசி) செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை செல்லப் பிராணிகள் வளர்ப்போர் கவனத்தில் கொண்டு, தங்களது ஆதார் கார்டுடன் வளர்க்கும் நாய்களை அழைத்து சென்றால் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலையின் முதல்வர் ரிச்சர்ட் ஜெகதீசன் கூறியதாவது: 'ரேப்டோ வைரஸ்' குடும்பத்தை சேர்ந்த ஒரு வைரஸ்தான் ரேபீஸ்'. இது நாய், பூனை, குதிரை, வவ்வால் போன்ற விலங்குகளை தாக்கும் அந்த விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவும். உலகளவில் ஆண்டுக்கு 59 ஆயிரம் பேர் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழக்கின்றனர். அதில் இந்தியாவில் மட்டும் 15 ஆயிரம் உயிரிழக்கின்றனர். மொத்த உயிரிழப்பில் 45 சதவீதம் இந்தியாவில் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வைரஸ் தாக்குதலை குணப்படுத்த வருமுன் காக்கும் மருந்துகள் கண்டறியப்படவில்லை. இதனால் தடுப்பூசி செலுத்துவதும், பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது மட்டும் தீர்வாக உள்ளது.
அதனால் செல்லப்பிராணிகளாக வளர்க்கும் நாய்களுக்கு கால்நடை மருந்தகங்களில் இலவச தடுப்பூசி செலுத்தி கொள்வது அவசியம்.,' என்றார்.