ADDED : ஜன 15, 2024 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : ஜன.26ல் குடியரசு தினத்தையொட்டி மாவட்டத்தின் முக்கிய இடங்களில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டு போலீசார் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
தேனி வெடிகுண்டு தடுப்பு பிரிவு எஸ்.எஸ்.ஐ.,க்கள் பிரகாஷ், திருபரன்கிரிவாசன் தலைமையிலான போலீசார் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நேற்று சோதனையை துவக்கினர்.
மோப்ப நாய் உதவியுடன் தேனி ரயில்வே ஸ்டேஷன், வாரசந்தை, பெத்தாட்சி விநாயகர் கோயில், பழைய பஸ் ஸ்டாண்ட், புது பஸ் ஸ்டாண்ட், ஆண்டிப்படி ரயில்வே ஸ்டேஷன் ஆகிய பகுதிகளில் மேற்கொண்டனர்.
மாவட்டம் முழுவதும் தொடர் சோதனைகள் நடைபெறும் என போலீசார் தெரிவித்தனர்.