/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மானாவாரி நில விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய மழை
/
மானாவாரி நில விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய மழை
மானாவாரி நில விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய மழை
மானாவாரி நில விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய மழை
ADDED : நவ 04, 2024 05:52 AM
கம்பம் : கம்பம் பள்ளத்தாக்கில் மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்த சோளம், கம்பு, தட்டைப் பயறு பயிர்களுக்கு இந்த தொடர் மழை நல்ல பயனை தந்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.
இப்பள்ளத்தாக்கில் லோயர் கேம்ப் முதல் போடி வரை மேற்கு தொடர்ச்சி மலையடி வாரங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் மானாவரி நிலங்கள் உள்ளன.
இவற்றில் மழையை நம்பி சோளம் , கம்பு, தட்டைப் பயறு உள்ளிட்ட நவதானியங்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
தற்போது சோளம், கம்பு, தட்டைப்பயறு சாகுபடி செய்து ஒரு மாதமாகிறது.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நல்ல மழை பெய்து வருவதால் மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. வரும் பிப்ரவரியில் அறுவடைக்கு வரும் இந்த பயிர்களுக்கு இந்த ஈரமே கை கொடுக்கும் என்று விவசாயிகள் நம்புகின்றனர்.
இந்த மழை நீடிக்கும் என்பதால், இந்தாண்டு மானாவாரி விவசாயிகளுக்கு நவதானிய பயிர் சாகுபடியில் பம்பர் மகசூல் கிடைக்க வாய்ப்பிருப்பதாக வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.