/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முல்லைப் பெரியாறு அணையில் தொடரும் மழை - தேக்கடிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

ADDED : ஏப் 08, 2025 06:43 AM
கூடலுார்,: முல்லைப் பெரியாறு அணையில் கடந்த 4 தினங்களாக தொடர்ந்து மழை பெய்வதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடுமையான வெப்பத்தை குளிர்வித்த மழையால் தேக்கடிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணையில் கடுமையான வெப்பத்திற்குப்பின் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி பெரியாறில் 3.2 மி.மீ., தேக்கடியில் 15 மி.மீ., மழை பதிவானது.
இதனால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 492 கன அடியாக அதிகரித்தது. நீர்மட்டம் உயர்ந்து 113.70 அடியானது. (மொத்த உயரம் 152 அடி). தமிழக பகுதிக்கு குடிநீருக்காக 105 கன அடி திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 1509 மில்லியன் கன அடியாகும். இரவு மழை பெய்யும் நிலை உள்ளதால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் வாய்ப்புள்ளது.
மகிழ்ச்சி
கடந்த நான்கு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடுமையான கோடை வெப்பத்தை குளிர்விக்க செய்துள்ளது. இதனால் தேக்கடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நீர்மட்டம் சற்று உயர துவங்கியுள்ளதால் தமிழக விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.