/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மழை மானி, வானிலை மானி பொருத்தும் பணிகள் தாமதம்: மழைப் பொழிவை துல்லியமாக கணக்கிடுவதில் சிக்கல்
/
மழை மானி, வானிலை மானி பொருத்தும் பணிகள் தாமதம்: மழைப் பொழிவை துல்லியமாக கணக்கிடுவதில் சிக்கல்
மழை மானி, வானிலை மானி பொருத்தும் பணிகள் தாமதம்: மழைப் பொழிவை துல்லியமாக கணக்கிடுவதில் சிக்கல்
மழை மானி, வானிலை மானி பொருத்தும் பணிகள் தாமதம்: மழைப் பொழிவை துல்லியமாக கணக்கிடுவதில் சிக்கல்
ADDED : பிப் 15, 2024 06:20 AM

தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் பெய்யும் மழை அளவை துல்லியமாக கண்டறிய 1300 தானியங்கி மழை மானிகள், 103 வானிலைமானிகள் பொருத்தப்படும் என அரசு கடந்தாண்டு அறிவிக்கப்பட்டது.
மாவட்டத்தில் தற்போது 5 தாலுகாகளையும் சேர்த்து 13 இடங்களில் தானியங்கி மழை மானிகள் உள்ளன. இதில் ஒவ்வொரு மழைமானிக்கு இடையே பல கி.மீ., துார இடைவெளி உள்ளன. இதனால் இரு மழைமானிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் பெரு மழை பெய்தாலும், அதனை துல்லியமாக பதிவு செய்வதில் சிக்கல் நீடித்து வந்தது.
அரசு அறிவிப்பின் படி மாவட்டத்தில் புதிதாக தேனி தாலுகாவில் இரு இடங்கள், பெரியகுளத்தில் 4 இடங்கள், ஆண்டிப்பட்டியில் 6 இடங்கள், போடியில் 5 இடங்கள், உத்தமபாளையம் தாலுகாவில் 9இடங்கள் என 26 இடங்களில் தானியங்கி மழைமானியும், தேனி பெருந்திட்ட வளாகத்தில் தானியங்கி வானிலை மானியும் பொருத்துவதற்கான பணிகள் 2023 செப்டம்பரில் துவங்கியது. மழைமானியில் 10 திறந்தவெளி தரைப்பகுதியிலும், 16 அரசு அலுவலக மாடிகளிலும் பொருத்தப்படுகிறது. அதற்கான பணிகளும் வருவாய் ஆய்வாளர்கள் மூலம் நடந்தது. நவம்பர், டிசம்பரில் கருவிகள் பொருத்தப்பட்டு 2024 ஜன., முதல் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இதுவரை தானியங்கி கருவிகள் பொருத்தும் பணிகள் துவங்க வில்லை. தானியங்கி வானிலைமானி பொருத்தப்பட்டால் அக்கருவி தொழில்நுட்பம் மூலம் மழைப்பொழிவு அளவு, வெப்பநிலை, காற்றின் வேகம், திசை, ஈரப்பதம், சூரியகதிர்வீச்சின் அளவு, மண்ணின் ஈரப்பதம் உள்ளிட்டவற்றை துல்லியமாக அறிய முடியும்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ' இக் கருவிகள் மதுரை வந்துள்ளன. அவற்றை பரிசோதித்து தேர்வு செய்யப்பட்ட இடங்களில் பொருத்தும் பணி விரைவில் துவங்கும்' என்றனர்.

