/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மூன்று தாலுகாக்களில் மழைமானி பணி நிறைவு
/
மூன்று தாலுகாக்களில் மழைமானி பணி நிறைவு
ADDED : மார் 03, 2024 06:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாவட்டத்தில் 26 இடங்களில் தானியங்கி மழைமானி, ஒரு வானிலை மானி பொருத்துவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதில் தேனி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி தாலுகாக்களில் 10 இடங்களில் தானியங்கி மழைமானி பொருத்துவதற்கான கட்டடப்பணிகள் முடிந்து, கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. போடி, உத்தமபாளையம் தாலுகாக்களில் 16 கருவிகள் பொருத்துவதற்கான பணிகள் நடந்து வருகிறது.
ஒரு தானியங்கி வானிலை மானி கலெக்டர் அலுவலகத்தில் பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது. இக்கருவிகள் அனைத்தும் இம்மாத இறுதிக்குள் பொருத்தி ஏப்., இறுதியில் கருவிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

